இவரிடம் என்ன குறை இருக்கிறது. மீண்டும் இவரை ஒருநாள் அணியில் இணையுங்கள் – பிராட் ஹாக் கருத்து

Hogg

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின் அந்த தொடர் முழுவதிலும் அற்புதமான ஃபார்மில் இருந்தார். ஆஸிதிரேலிய தொடரில் 12 விக்கெட்டுகளை அபாரமான அஸ்வின் வீழ்த்தியிருந்தார்.பின்னர் அதே ஃபார்முடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராகச் சென்னையில் நடந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி அஸ்வினின் பங்களிப்பு சற்று அதிகமாகவே இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுளை கைப்பற்றி அசத்திய அஸ்வின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி கூடுதலாக சதம் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.

Ashwin

பின்னர் அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வருகிறார். வெறும் டெஸ்ட் தொடருக்கான வீரர் மட்டுமே லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு இவர் செட்டாக மாட்டார் என கருதி அவரை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து வருகிறது. கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 2017ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அஸ்வின கடைசியாக விளையாடினார்.

அதன் பின்னர் எந்த ஒருநாள் போட்டியிலும் அவர் சேர்கக்கப்படவில்லை. அதே போல அதே ஆண்டு ஜூலை 9ஆம் தேதி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராகவே தனது கடைசி டி20 போட்டியை ஆடியுள்ளார். அதன்பின் மூன்றுஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் அஸ்வினுக்கு ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்க இந்திய அணியின் சார்பாக எந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும் டெஸ்ட் தொடரில் மட்டும் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் அஸ்வின் தனது முழு பங்களிப்பை அளித்து வருகிறார். மேலும் தன்னால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்களில் ஆடமுடியும் அதற்கு நான் தகுதியானவன் என்பதை நிரூபித்து கொண்டும் வருகிறார்.

Ashwin

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அஸ்வினை ஒருநாள் அணிக்குள் இந்திய கிரிக்கெட் கமிட்டி சேர்க்க வேண்டும் என ஏற்கெனவே கவுதம் கம்பீர் அஸ்வினுக்கு ஆதரவு அளித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்கிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இந்திய ஒருநாள் அணியில் அஸ்வின் மீ்ண்டும் இடம்பெறுவாரா அதற்கு வாய்ப்பு உள்ளதா ? என கேட்டார். அதற்கு பதிலளித்த பிராட் ஹாக் :

- Advertisement -

நிச்சயமாக அஸ்வினை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுபடியும் ஒரு நாள் அணிக்குள் கொண்டுவர வேண்டும்.அவர் ஒரு சிறந்த ஒருநாள் வீரர் அதில் சந்தேகமேயில்லை என்று கூறியுள்ளார். அவ்வாறு அஸ்வின் இந்திய அணிக்குள் வந்தால் அது அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும்.பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் சிறந்த வீரர் அஸ்வின்.நல்ல ஆல்ரவுண்டராக நிச்சயம் தனது முழு பங்களிப்பை அஸ்வின் கொடுப்பார்.

Ashwin

இதுவரை 109 ஒருநாள் போட்டிகளில் ஆடிய அவர் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.மேலும் அவரது பவுலிங் எகானமி வெறும் 4.92 என்பது குறிப்பிடதக்கது. அஸ்வின் மறுபடியும் ஒருநாள் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது கம்பீர், ஹாக் மட்டுமின்றி பல ரசிகர்களின் கோரிக்கையும் அதுவே ஆகும்.