இந்திய அணியின் வீரரான இவர் பிட்னஸ் இல்லாத வீரர். அவருக்கு பதிலாக சிராஜ் விளையாடலாம் – பிராட் ஹாக்

Hogg
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின் பௌலரான ப்ராட் ஹாக், இந்திய அணிக்கு மேலும் ஒரு ஆலோசனையை வழங்கி உள்ளார்.

INDvsNZ

இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் ஏஜஸ் பவுல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியானது நான்காவது வேகப் பந்து வீச்சளருடன் களமிறங்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் இந்திய அணியானது நான்காவது வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்தால் அந்த இடத்தை ஷர்துல் தாக்கூருக்கு பதில் முஹம்மது சிராஜிக்கு தான் வழங்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார் ப்ராட் ஹாக். இதுகுறித்து பேசிய அவர் :

- Advertisement -

உடல் பிட்னஷ் இல்லாத ஷர்துல் தாக்கூரால் ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீச முடியாது. அதற்கு மற்றொரு இளம் வீரரான முஹம்மது சிராஜ் தான் சரியான தேர்வாக இருப்பார். மூத்த வீரர்கள் இல்லாத நேரத்தில், அவர் இந்திய அணியின் பந்து வீச்சை வழிநடத்தி செல்லும் அளவிற்கு அவரிடம் திறமை இருக்கிறது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Thakur

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான முஹம்மது சிராஜ், அந்த தொடரில் இருந்தே சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய ப்ராட் ஹாக், தன்னுடைய இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நிச்சயமாக இடம் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

Siraj

இங்கிலாந்தின் சூழ்நிலையைப் பொறுத்த வரை நான் நான்கு வேகப் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் தான் களமிறங்க நினைப்பேன். மேலும் அந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜேவைத்தான் நான் தேர்வு செய்வேன். பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த நினைத்தால் அதற்கு ஜடேஜா தான் சரியான நபராக இருப்பார் என்று அவர் அதில் கூறினார். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வினை, இறுதிப் போட்டிக்கான அணியில் ப்ராட் ஹாக் தேர்வு செய்யாமல் விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement