இந்திய அணியின் வருங்கால கேப்டன் இவர்தான். அதுல மாற்றமே இல்ல – பிராட் ஹாக் கருத்து

Hogg
- Advertisement -

இந்திய அணியின் ஒயிட் பால் கிரிக்கெட்டில் ரெகுலர் வீரராக இருப்பவர் முன்னணி இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயம் அடைந்தார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட்ட இவர் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக அவர் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Iyer-1

- Advertisement -

இந்நிலையில் தனது காயத்திலிருந்து முழுமையான குணமடைந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் ஷ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் கரியர் மிகவும் சிறப்பான ஒன்று என்றும் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் ஒன்று என்றும் எதிர்கால இந்தியாவின் கேப்டன் அவர்தான் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திற்கு பிறகு தற்போது சிறப்பாக மீண்டு வந்துள்ளார். எப்பேர்பட்ட பிரஷர் சூழ்நிலையிலும் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர். இந்தியாவின் டி20 உலகக்கோப்பை அணியில் அவரை தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

Iyer

நிச்சயம் அவர் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக மாறுவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது என கூறியுள்ளார். தோள்பட்டை பகுதியில் காயம் அடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் விளையாட வில்லை என்றாலும் தற்போது இரண்டாவது பாகத்தில் விளையாடி வருகிறார்.

iyer 1

முதல் பாதியில் காயம் காரணமாக வெளியேறி நிலையில் கேப்டன் பதவியை தவறவிட்ட அவர் தற்போது இரண்டாவது பாதியிலும் தனது கேப்டன் பதவியைத் தவிர விட்டுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தான் இந்த இரண்டாவது பாதியில் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுவேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement