இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கணுனா அது இவர் கையில் தான் உள்ளது – பிராட் ஹாக் கருத்து

Hogg
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரானது நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்க உள்ளது. நாட்டிங்காம் இல் நடைபெற இருக்கும் இந்த முதல் போட்டியில் இந்திய அணி எவ்வாறு விளையாடப்போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் கடைசியாக 2011, 2014, 2018 ஆண்டுகளில் மூன்று முறை இந்திய அணி தொடர்ச்சியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

INDvsENG

மேலும் சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நியூசிலாந்திடம் இந்திய அணி இழுந்துள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த இங்கிலாந்து தொடரை வென்று மீண்டும் பலமான இந்திய அணியாக திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் இந்த இந்தியா இங்கிலாந்து தொடர் குறித்து யூட்யூப் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :

shami-1

இந்திய அணி இம்முறை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளது. பும்ரா, சிராஜ், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் என பலமான பவுலர்களை வைத்துள்ளது. இருப்பினும் என்னை பொருத்தவரை இந்த தொடரில் இந்திய அணியின் மேட்ச் வின்னராக வேகப்பந்துவீச்சாளர் ஷமி விளங்குவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது பந்துவீச்சு தற்போது மிகவும் தரமாக உள்ளது.

shami 2

எந்த நேரத்திலும் அவரது பந்தில் இருந்து எட்ஜ் கிடைக்கிறது. அதை சரியாக கேட்ச் செய்து விட்டால் அவருக்கு விக்கெட்டுகள் தொடர்ந்து கிடைக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் அவரது பவுலிங்கில் சில கேட்ச்கள் விடப்பட்டன. ஷமி எந்த நேரத்திலும் விக்கெட் எடுக்கக்கூடிய ஒரு பந்து வீச்சாளர். அதனால் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு துருப்புச் சீட்டாக அவரே இந்த தொடரில் இருப்பார் என பிராட் ஹாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement