இவரது ஆட்டம் 10 வருஷமாகவே டாப் லெவலில் உள்ளது. சச்சினின் சாதனையை இவர் காலி பண்ணுவார் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக தனது 16 வயதில் இருந்து ஆடி வந்தார். 24 வருடம் விளையாடி 18,000 ஒருநாள் ரன்களும் 15000 டெஸ்ட் ரன்கள் விளாசியுள்ளார். அதனை தாண்டி கிரிக்கெட்டில் தற்போது சொல்லப்படும் பேட்டிங் சாதனைகள் எல்லாம் அவரின் வசம்தான் உள்ளது. முதன்முதலில் 200 ரன்கள் அடித்தது. அதிக சதம் அடித்தது, அதிக அரை சதம் அடித்தது என அனைத்து பெயர் சொல்லும் சாதனைகளும் அவரிடம் தான் உள்ளது.

- Advertisement -

தனக்கென தனி சகாப்த்ததை உருவாக்கி வைத்திருந்தார். தற்போது விராட் கோலியும் அவரைப் போலவே அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது வரை 10,800 ரன்கள் குவித்து இருக்கும் விராட் கோலி இதனை அடிப்பதற்கு 220 போட்டிகள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரை பார்த்தால் இவரை விட 60 போட்டிகள் அதிகமாக விளையாடிதான் 10 ஆயிரம் ரன்கள் எடுத்தார்.

மேலும் 460 போட்டிகளில் விளையாடி தான் 100 சதங்கள் விளாசி இருந்தார். இதில் 200 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். இப்படியிருக்கையில் 75 டெஸ்ட் போட்டிகளும் 270 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள விளையாடியுள்ள விராட் கோலி 71 சதங்கள் விளாசி விட்டார். சச்சின் டெண்டுல்கர் விலாசி உள்ள இந்த 100 சதங்கள் சாதனையை விராட் கோலி தான் நிச்சயம் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். அவர் கூறுகையில்…

அந்த காலத்திலெல்லாம் வீரர்களுக்கு உடல் தகுதி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. இதன் காரணமாக அதிக காயம் ஏற்பட்டு நிறைய போட்டிகளில் அவர்களால் ஆட .தற்போது விராட் கோலியை போன்ற வீரர்கள் உடல் தகுதியில் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அனைத்து போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்க முடிகிறது.

Kohli

மூன்று விதமான போட்டிகளிலும் ஆடி பல சாதனைகளை படைத்து விட்டார். இவரால்தான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியும் நாளுக்கு நாள் அதிகமாக தான் ஆடுகிறாறோ தவிர அவரது ஆட்டம் குறைந்ததே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் பிராட் ஹாக்

Advertisement