இந்திய அணியில் புஜாராவுக்கு மாற்று வீரராக இவர் தான் இருக்க முடியும் – பிராட் ஹாக் கணிப்பு

- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகின்றன. மேலும் இந்திய அணியில் சில முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

williamson 1

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் புஜாரா அணியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இப்படி வெளியான தகவல் நிச்சயம் உண்மை என்றும் புஜாராவிற்கு பதிலாக மற்றொரு இந்திய வீரர் கண்டிப்பாக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

அதன்படி மூன்றாவது இடத்தில் கோலி விளையாடுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் இந்திய அணியின் மூன்றாவது வரிசையில் யார் விளையாடுவார்கள் என்று தான் அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்திய அணியில் என்னை பொருத்தவரை மூன்றாவது இடத்தில் புஜாராவுக்கு மாற்று வீரர் என்றால் அது ப்ரித்வி ஷா தான்.

இந்திய அணியில் ஏற்கனவே ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடி அவர் 3-வது இடத்தில் களம் இறங்கினால் இன்னும் சிறப்பாக விளையாடுவார். அந்த அளவிற்கு ஆற்றல் அவரிடம் உள்ளது. எனவே இங்கிலாந்து தொடரில் இல்லை என்றாலும் அடுத்து வரும் தொடர்களில் புஜாராவிற்கு மாற்றாக அவரே இறங்க வேண்டும் என பிராட் ஹாக் கூறியது குறிப்பிடத்தக்கது..

Advertisement