வித்தியாசமான வீரர்கள் மற்றும் கேப்டனை வைத்து சிறந்த ஐ.பி.எல் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக் – அணிவீரர்கள் பட்டியல் இதோ

Hogg
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது, தற்போது வரை 12 தொடர்ந்து நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அதற்கு காரணம் அந்த அணியின் கேப்டன்கள்தான் . ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் கேப்டனாக இருந்து அந்த அணியை திறம்பட வழிநடத்தி உள்ளனர்.

CskvsMi

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த அணியை தேர்வு செய்து வெள்யிட்டுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். இந்த அணியில் துவக்க வீரர்களாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர். மூன்றாவது வீரராக அசகாயசூரன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். மேலும் கேப்டனாகவும் அவரையே நியமித்துள்ளார்.

பிராட் ஹாக்கின் இந்த கேப்டன் தேர்வு சற்று வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் சென்னை அணிக்காக முதல் சீசனில் இருந்து கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி 3 முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக பல ஆண்டுகள் கேப்டன்ஷிப் செய்து 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் தொடர்களை தோனி தலைமையில் கைப்பற்றி கொடுத்துள்ளார். இப்படி கேப்டன் பதவியில் பல சாதனைகளை படைத்த தோனிக்கு கேப்டன் பதவி கொடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

Rohith-1

அதேபோன்று இளம்வீரர்களை தனது அணியில் கொண்டு எந்த ஒரு அணியையும் திறன் படைத்து ஐ.பி.எல் தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம்வரும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவையும் அவர் கேப்டனாக நியமிக்கவில்லை. இவர்கள் இருவரையும் தவிர்த்து இதுவரை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றாத கோலியை கேப்டனாக நியமித்தது ஆச்சரியமளிக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 4-வது வீரராக ரிஷப் பண்ட் , 5 ஆவது வீரராக ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வரலாற்று நாயகன் தோனிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக சுனில் நரேன் மற்றும் ரசித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Kohli

வேகப்பந்து வீச்சாளர்களாக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் முனாஃப் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .இதில் ஆச்சரியம் என்னவென்றால் விராட் கோலியை இந்த அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளார். விராட் கோலி தனது பெங்களூர் அணியை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளராக 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் ஐபிஎல் போட்டிகளை ஆடாத முனாப் படேலை தேர்வு செய்துள்ளார். இதுவும் சற்று ஆச்சரியம் தான். பிராட் ஹாக் தேர்வு செய்த அணி இதோ : ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ,விராட் கோலி ,ஏபி டிவில்லியர்ஸ், ரிஷப் பண்ட் , சுனில் நரைன், ரஷிட் கான், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் , முனாஃப் படேல்

ஏற்கனவே இதேபோன்று சிறந்த ஐ.பி.எல் லெவனை பலர் வெளியிட்டு இருந்தாலும் இந்த அணி சற்று வித்தியாசமான தேர்வாகவே இருக்கிறது. இந்த அணியில் யாருக்கு பதில் யாரை சேர்க்கலாம் என்று உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதனை கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement