தற்போதைய இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் ? கோலியா ? ரஹானேவா ? – பிராட் ஹாக் பேட்டி

Hogg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்கள் பலர் இன்றி இந்திய இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

IND-1

- Advertisement -

இந்திய இளம் வீரர்களான நடராஜன், சுப்மன் கில், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர். இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் இவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் பெற்று வருகின்றனர். அடிலெய்டு மைதானத்தில் நடந்த மோசமான தோல்விக்குப்பின் இந்திய கேப்டன் விராட் கோலி தனது சொந்த காரணத்தால் இந்தியா திரும்பினார்.

இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டனாக ரஹானே பதவியேற்று இந்திய அணியை வழி நடத்தினார். ரஹானே தலைமையில் செயல்பட்ட இந்திய அணி மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேனில் அபார வெற்றியை கண்டது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடுமையான போராட்டத்திற்குப் பின் டிரா செய்தது. இதனால் ரஹானே கேப்டன் பண்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

rahane

அதுமட்டுமின்றி ரஹானே இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி இருப்பதால் நிரந்தர கேப்டனாக ரஹானே இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் இதுகுறித்து கருத்து தெரிவித்து தெரிவித்திருக்கிறார். பிராட் ஹாக் “விராட் கோலி சிறந்த கேப்டன் ஆவார். இந்திய அணியை அவரால் சிறப்பாக வழிநடத்த முடியும். கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினால் அது ஒரு தவறான முடிவாக இருக்கும்.

Rahane

கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க கூடாது ஆனால் இதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டியில் ரஹானே சிறப்பாக செயல்பட்டார். ரஹானேவின் ஒவ்வொரு முடிவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வீரர்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் ரஹானே இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்க வேண்டும். கோலி தான் கேப்டனாக செயல்பட வேண்டும்” என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் பிராட் ஹாக்.

Advertisement