வெல்டன் இந்தியா.. ஜடேஜாவை மிரட்டிய அந்த 2 இங்கிலாந்து வீரர்களை ஆஷஸ்ல ஆஸி வெச்சு செய்யனும்.. ஹாடின் விளாசல்

Bradd Haddin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா போராடி ட்ரா செய்தது. அப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடைய சதத்தை தடுக்கும் நோக்கத்துடன் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக்கொள்ள வந்தார். ஆனால் அதை இந்திய கேப்டன் கில் ஏற்காததால் தொடர்ந்து விளையாடிய சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை அடித்ததும் போட்டி ட்ராவில் முடிந்தது.

முன்னதாக அப்போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் கை கொடுக்குமாறு பென் டக்கெட், ஜாக் கிராவ்லி இங்கிலாந்து வீரர்கள் மிரட்டலாக கெஞ்சினார்கள். குறிப்பாக சதத்தை அடிக்க விரும்பினால் பவுன்சர்களை போட்டு உங்களுடைய மண்டையை அடிப்போம் என்று ஜடேஜாவை இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அச்சுறுத்தினார். இந்நிலையில் அந்த தருணத்தில் இங்கிலாந்து மிரட்டலுக்கு அஞ்சாமல் சதமடித்த சுந்தர், ஜடேஜாவுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வெல்டன் இந்தியா:

மேலும் ஜடேஜாவை மிரட்டும் வகையில் பேசிய பென் டக்கெட், ஜாக் கிராவ்லியை வரும் டிசம்பரில் துவங்கும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹாடின் பேசியது பின்வருமாறு. “அது அந்த டெஸ்ட் போட்டியின் சுவாரசியமான முடிவு. ஏனெனில் 2 – 1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளார்கள். இங்கிலாந்து அப்போட்டியை வெல்லப்போகிறோம் என்று நினைத்தார்கள்”

“அப்போது இந்தியா நம்ப முடியாத பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். கில், ராகுல் அற்புதமாக விளையாடினார்கள். இந்தியா அபாரமான பதிலடியைக் கொடுத்து பேட்டிங்கில் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் திடீரென வெல்ல முடியாது என்று கருதிய இங்கிலாந்து போட்டியை நிறுத்த விரும்பினார்கள். இங்கிலாந்து விளையாடி முடித்து விட்டதால் போட்டியும் முடிய வேண்டுமென்று நினைத்தனர்”

- Advertisement -

ஆஷஸ்ல இருக்கு:

“அப்போது இந்தியா செய்ததை நான் விரும்பினேன். அவர்கள் தேவைப்படும் வரை விளையாடத் தகுதியானவர்கள். அவர்கள் சதத்தை அடிக்க தகுதியானவர்கள். இங்கிலாந்து தாங்கள் விரும்பியது நடக்கவில்லை என்றதும் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் வாய்மொழியாக அவர்கள் மோசமாக பேசினார்கள். டக்கெட், கிராவ்லி பேசிய விதத்திற்கு ஆஸ்திரேலியா அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இணைந்த சி.எஸ்.கே வீரர் – விவரம் இதோ

“தாங்கள் விரும்பியது கிடைக்கவில்லை என்றதும் இங்கிலாந்துக்கு மற்றவர்கள் அனைவரும் பிரச்சினையாக தெரிந்தது. ஆனால் அங்கு நின்று இந்தியா போட்டியை ட்ரா செய்தது. வெல்டன் இந்தியா. இத்தனைக்கும் இங்கிலாந்து வெற்றி பெற இந்தியா சில கேட்ச் வாய்ப்புகளைப் கொடுத்தது. அதையும் தாண்டி வெல்ல முடியாததாலேயே இங்கிலாந்து அங்கே நிற்க விரும்பவில்லை” என்று கூறினார்.

Advertisement