வேடிக்கை பார்த்த சிறுவனை தாக்கிய பந்து. விரைந்து முதலுதவி செய்த பிசியோ – வைரலாகும் வீடியோ

Virat-Singh

இந்தியாவில் தற்போது தியோதர் டிராபி போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ, இந்திய பி மற்றும் இந்திய சி ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா பி மற்றும் இந்திய சி ஆகிய இரு அணிகளும் மோதின.

இந்த போட்டியில் முகமத் சிராஜ் வீசிய பந்தில் விராட் சிங் என்ற பேட்ஸ்மன் பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க பந்து சிக்ஸர் எல்லையை கடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அங்கே இருந்த சிறுவனின் தோள்பட்டையில் பந்து பலமாக விழுந்தது. இதனால் சிறிது நேரத்திலேயே அந்த சிறுவன் வலியால் துடிக்க தொடங்கினான்.

மைதானத்தில் இருந்த வீரர்கள் அந்த சிறுவனை நோக்கி பார்வையிட மைதானத்தில் அமர்ந்து இருந்த அணியின் பிசியோ உடனே ஓடி சென்று அந்த சிறுவனுக்கு முதல் உதவி செய்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த சிறுவனுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த காணொளி இணைய ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.