பவுலரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறக்கும் பந்து

team
- Advertisement -

கிரிக்கெட்டில் அவ்வப்போது விசித்திரமான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.அப்படியொரு நிகழ்வுதான் நியூசிலாந்தில் நடைபெற்றது.நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வினோத சிக்சர் அடிக்கப்பட்டது.

போர்டு கோப்பைக்கான 3-வது இறுதி சுற்றில் நியூசிலாந்து உள்ளூர் அணிகளான ஆக்லாந்து-கான்டெர்பரி மோதின.ஆக்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

ஆக்லாந்து இடக்கை ஆட்டக்காரரான ஜீத் ரவல், எதிரணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் ஓடிவந்து வீசிய பந்தை தூக்கியடிக்க அது எதிர்பாராதவிதமாக அந்த பந்துவீசிய எலிசின் தலையில் பட்டு தெறித்து பவுண்டரி லைனை தாண்டி விழுந்து சிக்சராக மாறியது.

பந்து வீசிய ஆண்ட்ரூ எலிஸ் மண்டையில் பந்து பட்டு தெறித்ததால் வலியில் தலையை கொஞ்ச நேரம் தேய்த்தார்.பின்னர் மருத்துவ பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.

Advertisement