மிஸ்டர் 360 ஏ.பி.டி யை அதிகமுறை அவுட்டாக்கியது யார்..? இவரிடமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.!

abd-360

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிஸ்டர் 360 என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் அதாவது டொமஸ்டிக் டி20 போட்டியில் விளையாட வருகிறார் என்பது தெரிந்ததும் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவர் பேட்டிங் செய்ய கிரீசுக்கு வந்தால் அதிரடியில் சரவெடியாய் சிக்சரும் பவுண்டரியுமாக வெளுத்து வாங்குவர் இந்நிலையில் இவரை பற்றிய சுவாரசியமான விஷயத்தை பார்ப்போம்.

abd1

அதாவது பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு நிறைய சாதனையை தன் வசம் வைத்துள்ள டிவில்லியர்ஸை அதிகமுறை வீழ்த்தியவர் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அதிகமுறை அவரை அவுட் ஆக்கியவர் யார் என்றதுமே நீங்கள் பல பிரபலமான பந்துவீச்சாளர்களை யோசித்து பார்ப்பீர்கள். அப்படி நீங்கள் யோசித்தால் அது சரிதான். இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டூவர்ட் பிராட் இவரை டெஸ்ட் கிரிக்கட்டில் 10முறை மற்றும் மற்ற போட்டிகளில் 2முறை என்று மொத்தமாக 12முறை வீழ்த்தியுள்ளார்.

அடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் டிவில்லியர்ஸை 10முறை அவுட் ஆகியுள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அவரை அதிகமுறை அவுட்டாகியது பாகிஸ்தானை சென்றதை அஜ்மல் ஆவர். டி20ல் இந்தியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அதிகபட்சமாக 3முறை வீழ்த்தியுள்ளார். இவரது டி2ஓ வருகையால் மீண்டும் அவரது அதிரடியை காண நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.

broad

டிவில்லியர்ஸ் இதுவரை மொத்தம் 228 ஒருநாள் சர்வதேச போட்டியிலும் 114 டெஸ்ட் போட்டி மற்றும் 78 டி20 என மொத்தம் 420 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இவரை போன்ற இன்னொரு வீரர் வருவது சாத்தியமாக இருந்தாலும் இவரது ஆட்டத்திற்கு ஈடாகாது.