நல்ல நண்பர்கள் தான் என்றாலும் இந்திய வீரர்களுடன் இந்த முறை நாங்கள் தள்ளியே இருப்போம் – தெ.ஆ பயிற்சியாளர் அதிரடி

Boucher
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ஆம் தேதி துவங்க உள்ளது. 12ஆம் தேதி துவங்க உள்ள முதல் போட்டியில் தர்மசாலாவிலும், 15ஆம் தேதி இரண்டாவது போட்டி லக்னோவிலும், மேலும் 18 ஆம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

Ind

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்க அணியும் நேற்று விமானம் மூலம் டெல்லி வந்து இறங்கி அங்கிருந்து தர்மசாலா புறப்பட்டு சென்றது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரசின் தாக்குதல் இந்தியாவிலும் இருப்பதால் இந்திய வீரர்களுடன் சூழல் எவ்வாறு அமையும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : நாங்கள் தீவிரமாக மருத்துவ அடிப்படை விஷயங்களை பின்பற்றுவோம் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் இருப்பதால் இந்திய வீரர்களுடன் முறைப்படி கைகுலுக்குவது என்பதை எவ்வாறு கடைப்பிடிக்க போகிறோம் என்பது சூழலுக்கு ஏற்பவே முடிவு செய்வோம்.

rsa

அதேசமயம் சுகாதார காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் இருந்தால் அதை வீரர்கள் செய்யக் கடமைப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடன் கை கொடுக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வீரர்களின் நலன் கருதி என்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதனை நாங்கள் கடைப்பிடித்து ஆக வேண்டும்.

- Advertisement -

எனவே இந்திய வீரர்களுடன் நட்புறவில் கூட கை கொடுப்பதை தவிர்ப்பது தான் நல்லது என்றால் நாங்கள் கைகுலுக்க அனுமதிக்கமாட்டோம். எங்கள் அணியின் மருத்துவ ஆலோசகர் இருக்கிறார் அவர் ஏதேனும் மருத்துவம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர் அளிக்கும் பரிந்துரைகளை நாங்கள் அப்படியே பின்பற்றுவோம். நிச்சயம் நாங்கள் மருத்துவர் யோசனை இல்லாமல் எந்தவித நடவடிக்கைகளும் ஈடுபட மாட்டோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Ind vs Rsa

இதன்மூலம் அவர்கள் இந்திய அணியுடன் கைகுலுக்க மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து வீரர்களும் இலங்கை அணி வீரர்களுக்கு எதிராக கை கொடுப்பதை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. அவர்களது நடவடிக்கை ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement