இந்திய அணியை வீழ்த்த இவரே போதும். நிச்சயம் இந்திய அணியை இவர் பயமுறுத்துவார் – தெ.ஆ பயிற்சியாளர் பேட்டி

faf 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ஆம் தேதி துவங்க உள்ளது. 12ஆம் தேதி துவங்க உள்ள முதல் போட்டியில் தர்மசாலாவிலும், 15ஆம் தேதி இரண்டாவது போட்டி லக்னோவிலும், மேலும் 18 ஆம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

rsa

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்க அணியும் நேற்று விமானம் மூலம் டெல்லி வந்து இறங்கி அங்கிருந்து தர்மசாலா புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணம் குறித்து பேட்டியளித்த தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியதாவது : இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது அணியின் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் ஆகியோர் சம அளவில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் ஒரு அணியாக எங்களால் சிறப்பாக விளையாட முடியும்.

faf

ஒரு நாள் போட்டிகளில் டூபிளெஸ்ஸிஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்று நினைக்கிறேன். கடைசியாக விளையாடிய போட்டிகளும் அவர் சதம் அடித்து அசத்தினார். மேலும் இந்திய சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடும் பக்குவம் அவரிடம் உள்ளது.

- Advertisement -

இந்திய சுற்றுப்பயணத்தில் டூபிளெஸ்ஸிஸ் அனுபவம் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட பெருமளவில் உதவும். அவர் அணிக்கு ஏன் தேவை என்றால் இந்திய அணி சூழ்நிலையில் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடக் கூடியவர். மேலும் இளம் வீரர்களுக்கும் அவர் தனது அறிவுரையை பகிர்வார் இதனால் மைதானத்தில் சூழ்நிலையை அறிந்து சரியான முறையில் வீரர்கள் விளையாட முடியும்.

faf 1

இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கும் விதமாக இம்முறை வீரர்கள் தயாராகி வருகிறார்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு செயல்பாடு குறித்தும் வீரர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் மைதானத்தில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை காண ஆவலாக உள்ளோம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement