சர்வதேச அளவில் கிரிக்கெட் ஆட்டங்களின் போது சூதாட்டம் நடைபெறாமல் இருப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியமும், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளையம் கையாண்டு வருகின்றனர். இருந்தாலும் அவ்வப்போது ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் மற்றும் சூதாட்டம் போன்றவை நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் 2013 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா போன்ற வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அதன் பின்னர் அஜித் சண்டிலா சிறைத்தண்டனை பெற்றார். ஸ்ரீசாந்த் நிரபராதி என்று பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட துவங்கியுள்ளார்.
இந்நிலையில் வருடாவருடம் மேட்ச் பிக்சிங் குறித்து பிசிசிஐ போலீஸ் துணை கொண்டு கண்காணித்து வருகிறது. இந்த வருடம் வைரஸ் தொற்று காரணமாக உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்திற்குள் யாராலும் வர முடியாது இதன் காரணமாக சூதாட்ட தரகர்கள் நேரடியாக வீரர்களை அணுக முடியாது.
இருந்தாலும் ஒரு சில தரகர்கள் ஒரு குறிப்பிட்ட வீரரை ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு வீரரை ஆன்லைன் மூலம் அணுகியுள்ளார்கள். அந்த வீரரும் அந்த குறிப்பிட்ட சூதாட்ட தரகர்களுடன் பேசியிருப்பதை தெரிகிறது. இதனை ஐபிஎல் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் உறுதி செய்துள்ளார்.
மேலும் அந்த வீரரை தற்போது கண்காணித்து வருவதாகவும் அவர் தற்போது பிடிப்படமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். அவர் பிடிபடுவது கொஞ்ச நாள் ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் எந்த அணியை சேர்ந்தவர் ? இந்திய வீரரா ? வெளிநாட்டு வீரரா ? என்று கேட்டதற்கு அந்த ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் பதில் சொல்லாமல் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.