சோனம் கபூர் திருமணத்திற்கு வாழ்த்து சொன்ன கோலி தம்பதியினர் ..! என்ன வாழ்த்து தெரியுமா.. ?

sonamkapoor
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த மே 1 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்ட நிலையில் நேற்று (மே 8) மும்பையில் உள்ள சோனம் கபூரின் உறவினர் ரெசிடென்னசியில் கோலகலமாக நடைபெற்றது.

- Advertisement -

இந்த திருமணத்தில் சோனம் கபூரின் தந்தையான அணில் கபூரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் பங்கேற்றனர். மேலும் இந்த திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்களான வருண் தவான், ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர் போன்றவர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்திற்கு சோனம் கபூரின் தோழியும், அனுஷ்கா ஷர்மா மற்றும்  விராட் கோலிவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த திருமணத்தில் அவர்கள் இருவருமே பங்குகொள்ளவில்லை. இருப்பினும் சமீபத்தில் திருமணமான இந்த புது தம்பதியர்களை அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது “நீங்கள் இருவரும் வாழ்கை முழுவதும் நீண்ட அன்பையும், சந்தோஷத்தையும் பெற்று இருக்க எனது வாழ்த்துக்கள் ” என்று ட்வீட் செய்துள்ளார்.

அனுஷ்காவின் டீவீட்டை கண்டு அதற்கு ரீ ட்வீட் செய்துள்ள புது மணப்பெண்ணாக நடிகை சோனம் கபூர்” மிக்க நன்றி அனுஷ்க்கா, நாங்கள் இருவருமே உங்களையும் விராட்டையும் மிஸ் செய்தோம் ” என்று அனுஷ்காவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை சோனம்.

Advertisement