- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரோட விக்கெட்டை எடுத்து இந்தியாவை தோற்கடிக்கனும்.. செஞ்சு காட்டுறேன்.. ஜிம்பாப்வே வீரர் பேட்டி

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் போன்ற அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா இத்தொடரில் களமிறங்குகிறது.

அந்த வகையில் இந்தியா இந்த தொடரில் முழு பலத்துடன் விளையாடவில்லை என்றே சொல்லலாம். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா, ருதுராஜ், ரிங்கு சிங் போன்ற நிறைய தரமான இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகியுள்ளனர். எனவே இத்தொடரில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

முக்கிய விக்கெட்:
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து இந்தியாவை தோற்கடிப்பதே தம்முடைய கனவு என்று ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முசுர்பானி தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “மற்ற பவுலர்களை விட நான் கொஞ்சம் வித்தியாசமானவன் என்று நினைக்கிறேன். நான் சுப்மன் கில்லை அதிகமாக மதிக்கிறேன்”

“ஏனெனில் அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்டுள்ளார். சொல்லப்போனால் அவர் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய பெயரைக் கொண்டுள்ளார். இருப்பினும் போட்டி என்று வரும் போது அவருடைய விக்கெட்டை எடுப்பது எனக்கு முக்கியம். எனவே நான் எந்த வீரரையும் பார்க்கப்போவதில்லை. அவர்களை அடிக்கடி அவுட்டாக்கி பாக்கெட்டில் போட வேண்டும் என்று நினைக்கவில்லை”

- Advertisement -

“ஜிம்பாப்வே அணிக்காக வெற்றியைப் பெற வேண்டும் என்பதே இலக்காகும். அதற்கு விக்கெட்டை எடுக்கிறோம் அல்லது எடுக்கவில்லை என்பது முக்கியமல்ல. அணியாக சேர்ந்து என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்பதே முக்கியம். அதனால் எதிரணியில் இருக்கும் பெரிய பெயர்களை நான் பார்க்கப் போவதில்லை. ஒருவேளை அவர்களை நான் அவுட்டாக்கினால் அது என்னுடைய அணிக்கு நல்லது”

இதையும் படிங்க: அவரோட ரெக்கார்ட் பேசும்.. அந்த 3 இந்திய வீரர்களும் ஆபத்தானவங்க.. இது எங்களோட கனவு.. ஜிம்பாப்வே கோச்

“அதே சமயம் சுப்மன் கில் நல்ல பிளேயர். எனவே அவரை அவுட்டாக்குவது நன்றாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடர் ஜூலை 6ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்.

- Advertisement -