தேசிய கட்சியான பா ஜ கா வில் மக்களை கவரும் விதத்தில் சினிமா நடிகைகளையும், பிரபலங்களையும் தங்களது கட்சியில் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரானா வேட்பாளராக நிறுத்த பா ஜ கா தேசிய தலைவர் அமீத் ஷா திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளை பாஜக அணி மும்மரமாக தொடங்கியுள்ளது. அதிலும் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இப்போதே தீவிரமாக தொடங்கிவிட்டார். இதற்காக எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்று திட்டம் தீட்டி வருகிறார்.
மேலும் பா ஜ க கட்சியை எப்படியாவது மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று மும்மரமாக வேலை செய்து வரும் அமீத் ஷா, அதற்காக பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரும் நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் சண்டிகர் தொகுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக கபில் தேவை, பா ஜ கா தேசிய தலைவர் அமீத் ஷா நேரில் சந்தித்து அவருடைய ஆதரவை கோரியதாக கூறப்பட்டது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த கபில் தேவ்விற்கு அங்கே செல்வாக்கு இருக்கும் என்று அமித் ஷா அவரிடம் ஆதரவு கேட்டுள்ளார் என்று செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே பா ஜ க அணியில் இந்திய வீரரான கங்குலி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.