வெற்றியுடன் ஓய்வுபெற விரும்புகிறேன். இறுதி போட்டியுடன் ஓய்வு பெற இருக்கும் முன்னணி வீரர் – விவரம் இதோ

Watling
- Advertisement -

இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, அந்த மகிழ்ச்சியுடனேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ஒருவர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயமடைந்த அவர், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

INDvsNZ

- Advertisement -

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் 35 வயதான பிஜெ வாட்லிங், இதற்கு முன்னரே அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியின்போது காயமடைந்த அவர், இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. மேலும் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவரா? மாட்டரா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது நியூசிலாந்து அணி. அதில் பிஜெ வாட்லிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி போட்டியை விளையாடப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்திருக்கும் அவர், அதில் கூறியதாவது; காயத்திலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரனாக காயம் அடைவதெல்லாம் அவ்வப்போது நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் இதுபோன்ற சமயத்தில் அதில் இருந்து சீக்கிரமாக குணமாகி வந்தது ஒரு நல்ல விடயமாக இருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே நான் கருதுகிறேன். இந்த இறுதிப் போட்டியானது, ஐசிசி கோப்பையை கைப்பற்ற எங்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பாக கருதுகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரைக் நாங்கள் கைப்பற்றி இருப்பதால் அது எங்களுக்கு மனரீதியான நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மேலும் இது என்னுடைய கடைசி சர்வதேச போட்டி என்பதால், வெற்றியுடன் ஓய்வு பெற நான் விரும்புகிறேன் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

watling 1

2009ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமான பிஜெ வாட்லிங், சர்வதேச போட்டிகளில் அந்த அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்துள்ளார். பேட்டிங்கில் 3789 ரன்கள் அடித்ததுடன், 290 முறை ஒரு கீப்பராக செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி உள்ளார்.

Advertisement