நாங்கள் தோனியை பாதுகாக்க தேவையில்லை. அவர் நாட்டு மக்களை பாதுகாப்பார். அதன் காரணம் இதுதான் – விவரம் இதோ

Dhoni1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். இந்த அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

Dhoni

அதனைத் தொடர்ந்து இரண்டு மாத பயிற்சி காலத்தில் இணைந்து தோனி அடுத்த 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தோனி தனது பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தோனி ராணுவத்தில் இணைந்தது பற்றி பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது : நாங்கள் தோனியை பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. அவர் தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்படுகிறார். குடிமக்களையும் பாதுகாப்பு படை வீரர்களையும் அவர் பாதுகாப்பார். மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் ராணுவ சீருடை அணிய விரும்பினால் அவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு அதன் பின் பணிகளில் ஈடுபட வேண்டும்.

Dhoni 1

அந்த வகையில் தோனி தன்னுடைய அடிப்படை பயிற்சிகளை தற்போது பெற்று வருகிறார். தன்னுடைய பணிகளை தொடர்ந்து அவர் செய்வதன் மூலம் நிச்சயம் நாட்டுக்காக சேவை செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்று பிபின் ராவத் தோனி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

- Advertisement -
Advertisement