இந்திய அணிக்கு தேர்வாகாதது என் கையில் இல்லை.. எல்லாம் அவர்களிடம் தான் இருக்கு – புவனேஷ்வர் குமார் பேட்டி

Bhuvi
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் திகழ்ந்தார். இந்த ஆண்டு அவர் ஆர்.சி.பி அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்திய அணிக்கு கம்பேக் குடுப்பது குறித்து பேசிய புவனேஷ்வர் குமார் :

நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் காகிஸோ ரபாடா 29 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்ந்த வேளையில் அவருக்கு அடுத்து 28 விக்கெட்டுகளுடன் புவனேஸ்வர் குமார் இந்த தொடரை நிறைவு செய்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

- Advertisement -

அதோடு தற்போது 36 வயதாகும் அவர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 2026 ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணிக்கு தான் தேர்வாவது குறித்து பேசியுள்ள புவனேஸ்வர் குமார் சில விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது இன்ஸ்விங்கர் பந்துகளை அதிகமாக வீசினேன். பிறகு படிப்படியாக அவுட்டிங் ஸ்விங் வீசும் முறையும் கற்றுக் கொண்டேன்.

தற்போது என்னால் பந்தை இருபுறமும் நன்றாக ஸ்விங் செய்ய முடிகிறது. இன்றளவும் நான் மிகச் சிறப்பாக பந்துவீசும் திறனுடன் தான் இருக்கிறேன். எந்த அணிக்காக விளையாடினாலும் நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்காக உழைத்து வருகிறேன். இந்திய அணிக்கு நான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பலரும் கூறி வருவதை பார்க்கிறேன். ஆனால் அது என்னுடைய கைகளில் கிடையாது. தேர்வாளர்களின் கைகளில் தான் அது உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதே இவர்தானாம் – வெளியான தகவல்

தேர்வாளர்கள் அவர்களுடைய பணியை செய்கிறார்கள். அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் அவர்கள் முன்னிலைப்படுத்துவார்கள். எனவே நான் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகாதது குறித்து எதுவும் யோசிக்கவில்லை. என்னுடைய எண்ணம் எல்லாம் நான் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டும்தான் என புவனேஷ்வர் குமார் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement