இங்கிலாந்து வீரரை பார்த்து முறைத்த புவனேஸ்வர் குமார்..! இருவரையும் கண்டித்த நடுவர்..! – காரணம் இதுதான்..?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லேவும், போட்டி நடுவருக்கு சேர்ந்து புவனேஸ்வர் குமாரை கடுப்பேற செய்துள்ளனர்.
bhuvneshwa
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ,3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 தொடரில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லே 15 பந்துகளில் 29 அடித்து இங்கிலாந்து அணியின் ரன்களை சற்று கூட்டினர்.

இந்த போட்டியில் 17 வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமாரின் பந்துகளை டேவிட் வில்லே சிதறடித்தார். இதனால் அந்த ஒவரில் மட்டும் 20 ரன்களை புவனேஸ்வர் குமார் விட்டுக்கொடுத்தார். பின்னர் போட்டியின் கடைசி ஓவரை சுதாரித்து வீசினார் புவனேஸ்வர் குமார். இறுதி ஒவரில் புவனேஸ்வர் குமார் முதல் 3 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

புவனேஸ்வர் குமார் தொடர்ந்து ஆப் திசையில் பந்தை வீசுகிறார் என்று கணித்த டேவிட் வில்லே புவனேஸ்வர் குமார் பந்து வீசுவதற்கு முன்பாகவே ஆப் திசையில் நகர்ந்து வந்து ஆடினார். இதனால் பந்தை மேலும் தள்ளி ஆப் திசையில் வீசினார் புவனேஷ்வர் குமார். அதனை நடுவர் அகல பந்து என்று அறிவித்து விட்டார் இதனால் புவனேஸ்வர் குமார் அதிருப்தி அடைந்தார்.


ஏனென்றால் பந்துவீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன்கள் ஏறிவரும் நிலையில், ஆஃப் திசையில் விலகி வீசப்படும் பந்துகளுக்கு அகல பந்து கொடுக்கப்படாது. இதை தொடர்ந்து அடுத்து வீசிய பந்திலும் இதே போன்றே நடக்க நடுவர் மீண்டும் அகல பந்து என்று அறிவித்தார். இறுதியில் கடைசி பந்தை புவனேஷ் வீச வரும்போது, மீண்டும் டேவிட் வில்லே ஆஃப் திசையில் நகர்ந்து வந்ததால் புவனேஷ்வர் குமார், பந்துவீசவில்லை. இதையடுத்து புவனேஷ்வர் குமாருக்கும் வில்லேவிற்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இறுதியில் கடைசி ஒவரில் புவனேஸ்வர் குமார் 2 அகல பந்தையும் சேர்த்து 8 ரன்களை கொடுக்க நேரிட்டது.

Advertisement