இவரு ஒரு விக்கெட் தாங்க எடுத்தேன். உலகமே அன்னைக்கு தான் என்ன திரும்பி பாக்க வைத்தது – புவனேஷ்வர் குமார் பேட்டி

Bhuvi

இந்திய அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இடம் பெற்று விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நல்ல வேகத்துடன் அருமையாக ஸ்விங் செய்யக்கூடிய பாஸ்ட் பவுலராக புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் 2012 ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போதுவரை அதே உத்வேகத்தோடு விளையாடி வருகிறார்.

bhuvi

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கான முதன்மை பந்து வீச்சாளராக திகழும் புவனேஸ்வர் குமார் இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட், 114 ஒருநாள் போட்டிகள் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். புவனேஸ்வர் குமார் பும்ரா மற்றும் ஷமி போன்றவர்களை போன்று 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச மாட்டார்.

மிதமான வேகத்தில் 130 கிலோ மீட்டர் வீசினாலும் பந்தினை இரு புறங்களிலும் ஸ்விங் செய்யக்கூடிய அருமையான திறமை படைத்தவர் என்பதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்தை கணிப்பதில் சிரமப்படுவார்கள். மேலும் தொடர்ச்சியாக விக்கெட் வேட்டை நடத்தி வந்த புவனேஷ்வர் குமாருக்கு கடந்த சில வருடங்களாகவே காயம் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Bhuvi-1

அவ்வப்போது இந்திய அணியில் வருவதும் போவதுமாக இருக்கும் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் முக்கிய பவுலராகவே இதுவரை விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது கிரிக்கெட் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த சம்பவத்தைப் இதுகுறித்து எஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : 2008-09 ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரை நான் ரன் ஏதும் எடுக்கவிடாமல் வீழ்த்தினேன். எனது கெரியரில் ஏற்பட்ட பெரிய திருப்புமுனையே அதுதான் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் சச்சினை அவுட்டாக்கிய அந்த சம்பவத்தை குறித்து தொடர்ந்து பேசிய அவர் :

சச்சின் விக்கெட்டை வீழ்த்தும் முன்பே நான் 30-35 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன். ஆனால் சச்சினை அவுட் ஆக்கிய பிறகு தான் அனைவரது பார்வையும் என் மீது திரும்பியது. அதன் பின்னர் என்னுடைய பழைய புள்ளி விவரங்களையும் அவர்கள் சேமிக்கத் தொடங்கி விட்டனர். சச்சின் அவுட் ஆகிய அந்தத் தருணம்தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சர்வதேச அளவில் துவங்க ஆரம்பித்தது என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.