என்னுடைய பேஸ்புக் கணக்கு திருடப்பட்டது. அதை திருடியவர் யார் தெரியுமா ? ஷாக் ஆயிட்டேன் – புவனேஷ்வர் குமார் பேட்டி

Bhuvi-1

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் புவனேஸ்வர் குமார். கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் தோழியான நுபுர் நாகர் திருமணம் நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

bhuvi

தற்போது காயம் காரணமாக இந்திய அணிக்காக விளையாட முடியாமல் இருந்து வரும் அவர் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மற்றவர்களை போல இவரும் இவரது மனைவியும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ஒன்றிற்கு தனது வாழ்க்கையை பற்றி பேட்டி கொடுத்திருந்தார் புவனேஸ்வர் குமார். இதில் அவரது மனைவியும் கலந்து கொண்டார். அப்போது மனைவி தனது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்துவிட்டதாக கூறினார். மேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது :

Nagar

அவள் என்னிடம் பேஸ்புக் பாஸ்வேர்டு கேட்டாள். ஆனால் நான் சில சாக்குப் போக்குகளைக் கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அடுத்தநாளே இதுதான் உங்களுடைய புதிய பாஸ்வேர்ட் என்று கூறி என்னை ஆச்சரியப்படுத்தி விட்டாள்.

- Advertisement -

அவள் உண்மையிலேயே எனது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து பாஸ்வேர்டை மாற்றி விட்டாள். அதன்பிறகு பேஸ்புக் கணக்கை நான் பயன்படுத்தவில்லை என்று வெளிப்படையாகக் கூறினார் புவனேஸ்வர் குமார் ..

Nagar 1

மேலும், இந்த இருவரும் பல்வேறு விஷயங்களை விளையாட்டாக பகிர்ந்துகொண்டனர் .அப்போது புவனேஸ்வர் குமார் பெண் ரசிகர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுக்கும் போது எனக்கு எரிச்சல் அடையும், அவ்வளவு நெருக்கமாக நின்று ஏன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் கேட்பேன் இவ்வாறு கூறினார் அவரது மனைவி நுபுர் நாகர்.