அவரே நெனச்சாலும் அடுத்த 6 மாசத்துக்கு இவரால் கிரிக்கெட் விளையாட முடியாதாம் – வெளியான அறிக்கை

Ind
- Advertisement -

இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுள் புவனேஸ்வர் குமாரும் ஒருவர். இவர் 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடி இந்திய அணிக்காக அறிமுகமானார். இதன்பிறகு 2013 பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்திய அணிக்காக மொத்தம் 21 டெஸ்ட், 114 ஒருநாள் மற்றும் 40 டி20 தொடர் விளையாடியுள்ளார். இதுவரை இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களாக அனைத்து வகையான அணிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

Bhuvi-1

- Advertisement -

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். புவனேஸ்வர் குமார் உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார் இது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி எந்தவகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையுடையவர்.

இந்நிலையில்,கொரானா வைரஸின் பல எதிர்ப்புகளை தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13 வது ஐபிஎல் சீசனில் புவனேஸ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.இதனால் அப்போது தனது அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த புவனேஸ்வர் குமாருக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கு பெற முடியாமல் வெளியேறினார்.

bhuvi

இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் புவனேஸ்வர் குமார் இடம்பெற முடியாமல் போய்விட்டது. இதனால் தற்போது புவனேஸ்வர் குமார் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் பயிற்சிகள் முடிந்துவிடும். இருப்பினும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை. ஏனெனில் அவரின் குணமடைய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

Bhuvi 1

இதனால் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் சீசனில் தான் புவனேஸ்வர் குமார் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும் என்று செய்திகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு புவனேஸ்வர் குமார் முழுமையாக ஓய்வு பெறவேண்டும் என்று அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வேகப்பந்து வீச்சு மிகவும் உடலை வருத்தி செய்யும் வேலை. இதன் காரணமாக புவனேஷ்வர் குமாருக்கு மேலும் ஓய்வு தேவை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Advertisement