33 வயதிலேயே முடிவுக்கு வந்த இந்திய வீரரின் கிரிக்கெட் பயணம்.. ஓரங்கட்டும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

IND-Team
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்கள் ஒதுக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களை பி.சி.சி.ஐ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் மேலும் சில வீரர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரை தொடர்ந்து பிசிசிஐ தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

33 வயதான புவனேஷ்வர் குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

துவக்க ஓவர்களிலேயே ஸ்விங் செய்து அட்டகாசமாக பந்துவீசும் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்றும் நடைபெற்ற முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடர் என அனைத்திலும் ஓரளவு சிறப்பான செயல்பாட்டில் வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அதன்காரணமாக அவருக்கு இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. ஆனால் 33 வயதான புவனேஸ்வரர் குமாரை திட்டமிட்டு பிசிசிஐ ஓரம்கட்டுவதாகவும், இளம் வீரர்கள் வருகையினால் அவரை தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாக ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய ரசிகர்கள் பற்றி அப்படி முட்டாள்தனமா பேசியிருக்கக் கூடாது.. இளம் இங்கிலாந்து வீரர் வருத்தமான பேட்டி

ஏற்கனவே இந்திய அணியின் அனுபவ சீனியர் துவக்க வீரரான ஷிகார் தவான் புறக்கணிக்கப்பட்ட வேளையில் தற்போது புவனேஷ்வர் குமாரின் கிரிக்கெட்டில் கரியரும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது.

Advertisement