ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்திற்கான பிளேயர் ஆஃப் மன்த் விருதை பெற்ற இந்திய வீரர் – யார் தெரியுமா ?

ind
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கௌரவப்படுத்தும் விதமாக “பிளேயர் ஆப் தி மன்த்” என்ற விருதினை வழங்கி வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்ட முதல் விருதுக்கு இந்திய வீரரான ரிஷப் பண்ட் மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான இரண்டாவது விருந்துக்கு அஸ்வினும் தேர்வாகி இருந்தார்கள்.

Pant-3

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த மார்ச் மாதத்திற்கான விருது யாருக்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரசித் கான், ஜிம்பாப்வே வீரர் வில்லியம்ஸ் மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் என்று புவனேஸ்வர் குமார் அதிகாரபூர்வமாக ஐசிசி-யால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் புவனேஷ்வர் குமார் முதலிடம் பெற்றதால் அவர் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 6 விக்கெட், டி20 தொடரில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார் புவனேஸ்வர் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. icc இந்த விருதினை வழங்க ஆரம்பித்த இந்த மூன்று மாதங்களாகவே இந்திய வீரர்கள் இந்த விருதினைப் பெற்று வருவதால் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக இது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement