புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக 2013 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். 2014ஆம் ஆண்டில் இருந்து ஹைதராபாத் அணிக்காக மட்டுமே ஆடிவருகிறார். இந்நிலையில் தற்போது தோனியை போன்று தனது மனநிலையை மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார் புவனேஸ்வர் குமார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : 2014-ம் ஆண்டில் இருந்து நான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறேன். யார்க்கர் பந்தை எப்போது எந்த சூழ்நிலையில் வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு வருகிறேன். இவை அனைத்தையும் ஐபிஎல் போட்டிகளின்போது தான் கற்றுக்கொண்டேன், சில நேரங்களில் நாம் நினைப்பது போன்று பந்து வீச முடியாது,
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது 14 போட்டிகளில் நான் விளையாடினேன், கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலுமே நான் தான் முதல் மற்றும் கடைசி ஓவர்களில் வீசினேன், இதன்மூலம் சவாலான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்ற விஷயத்தை கற்றுக் கொண்டேன். இக்கட்டான சூழ்நிலையில் தோனியை போன்று சாந்தமாக இருந்து பொருமையான முறையில் பந்து வீச வேண்டும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஐபிஎல் சீசன்களில் நான் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். வெற்றியோ தோல்வியோ எனது தலைக்கு அது எப்போதுமே வராது .ஒவ்வொரு பந்தையும் சிறப்பாக வரவேண்டும் என்று மட்டுமே என் மனதில் நினைத்துக் கொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார். தோனி எவ்வாறு முக்கிய சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கிறாரோ அதே போன்று நான் அமைதியாக இருப்பதாலே நான் சிறப்பாக பந்துவீசி வருகிறேன் என்று புவனேஷ்வர் குமார் கூறினார்.

புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளையும், 114 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்டுகளையும் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



