Virat Kohli : காயம் காரணமாக நட்சத்திர பந்துவீச்சாளர் 3 போட்டிகளில் விளையாடமாட்டார் – கோலி பேட்டி

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான்

Bhuvi-1
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

ind pak

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

kuldeep 1

இந்த போட்டியில் 5 ஆவது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பந்து வீசினார். அந்த ஓவரில் பந்துவீசும்போது கால் தவறி கீழே விழுந்த புவனேஷ்வர் குமார் காயமடைந்தார். அதனால் அப்போதே அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் :

Bhuvi

புவனேஸ்வர் குமார் காயமடைந்துள்ளார். அவரின் காயம் குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் அதனால் அவர் அடுத்து வரும் 2 அல்லது 3 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் கோலி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Advertisement