“Rivers Swing “-ல் மிரட்ட வருகிறார்.! இந்திய அணியில் இணையும் அடுத்த வேகப்பந்து வீச்சாளர்.!

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் பந்தினை “Rivers Swing” செய்வதில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை அந்த அளவிற்கு ஸ்விங் செய்து பந்துவீசுவர். இவர் தற்போது காயத்திலிருந்து முழுமையாக மீண்டதால் அணியில் இடம்பிடிக்க பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.

bhuvi

- Advertisement -

கடந்த ஆண்டு நடந்த IPL தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் அத்தொடரின் இறுதியில் காயமடைந்தார். பின் முதுகின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டதால் இவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவரின் பெயர் இடம்பெற்றாலும் இவர் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடிய இவர் அப்போட்டியில் மீண்டும் காயமடைந்தார். மீண்டும் பெரிய அளவிலான வலியினால் தொடர்ந்து ஆடவில்லை.

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் ஆடமாட்டார் என்று இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக மீண்ட அவர் தனது உடற்தகுதியினை நிரூபித்தார். இருந்தாலும் அடுத்த 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தன்னை அவர் தீவிர உடற் பயிற்சியின் மூலம் தயார் செய்து கொண்டு வருகிறார். எனவே அவர் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bhuvi 2

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி இவரின் வருகையால் பலம் பெரும் என்று நமபலாம். ஏற்கனவே இந்திய அணியின் மற்றொரு பவுலரான பும்ராவும் தனது உடற்தகுதியினை நிரூபித்ததால் அணியில் இடம்பெற உள்ளார் . என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரின் பந்து வீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை.

Advertisement