இவர் விக்கெட்டை வீழ்த்திய பின்புதான் நான் சாதனை செய்ததாக உணர்ந்தேன் – புவனேஷ்வர் குமார் பேட்டி

Bhuvi-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் புவனேஸ்வர் குமார். இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி சிறப்பாக பந்துவீசும் திறமை பெற்றவர். மேலும் பந்து எந்த நிலையில் இருந்தாலும் அதனை ஸ்விங் செய்வதில் உலக அளவில் கெட்டிக்காரரான இவர் தற்போது முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்திய அணியில் தற்போது சமீபகாலமாக காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த புவனேஸ்வர் குமார் மீண்டும் தனது உடற் தகுதியை நிரூபித்து அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கிரிக்பஸ் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடிய நிகழ்வு ஒன்றினை நினைவு கூர்ந்துள்ளார்.

- Advertisement -

அதன்படி 2008-09 ஆம் ஆண்டுகளில் மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி ஒன்றில் மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கரை முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கி வெளியேற்றியதை அவர் குறிப்பிட்டுள்ளார். அன்றைய போட்டி குறித்து புவனேஸ்வர் குமார் மேலும் பேசுகையில்: அன்றைய நாளில் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்ய பிட்சின் நடுவே வந்தார்.

நான் அப்போது பௌலிங் செய்வதற்காக எதிர் திசையில் நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மேலும் தொடர்ந்து நான் வீசிய முதல் பந்தை டிபன்ஸ் செய்ய நினைத்த சச்சின் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அப்பொழுது நான் ஒரு பேட்ஸ்மேன் அவுட் செய்து விட்டதாக மட்டுமே எண்ணினேன். ஆனால் கிரவுண்டை விட்டு வெளியேறிய பின்பு தான் சச்சின் டெண்டுல்கரை நான் அவுட் ஆகி இருக்கிறேன் என்ற மகிழ்ச்சி தோன்றியது.

- Advertisement -

மேலும் நான் சச்சினை அவுட் ஆக்கியது குறித்து அடுத்த நாள் காலை நாளிதழ்களில் செய்தியாக வெளி வந்தன. அப்போதுதான் நான் ஒரு பெரிய சாதனையை செய்ததாக உணர்ந்தேன். மேலும் சச்சின் விக்கெட்டை தொடர்ந்து என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே மாறியது என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்.

புவனேஷ்வர் குமாரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவர் சச்சினை வீழ்த்திய வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்த புவனேஸ்வர் குமார் தற்போது மூன்று வித கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

Advertisement