இவரை நான் வீழ்த்தவில்லை என்றால் வெஸ்ட் இண்டீஸை ஜெயிக்கவே வைத்திருப்பார் – புவனேஷ்வர் குமார் பேட்டி

Bhuvi-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்களான ரோஹித், ராகுல் மற்றும் கோலி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.அதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அந்த அணியின் ஹெட்மயர் மற்றும் பி;பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக ஆடினார்.

அதிலும் குறிப்பாக பொல்லார்ட் 39 பந்துகளில் 68 ரன்கள் அடித்து இந்திய அணியை அலற வைத்தார் அவர் அடித்த 68 ரன்களில் 6 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகள் அடங்கும். புவனேஸ்வர் குமார் வீசிய 15 ஆவது ஓவரில் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த புவனேஷ்வர் குமார் கூறுகையில் : பொல்லார்ட் ஒரு மிகச் சிறந்த வீரர். அவரை வீழ்த்தியதை பெருமையாக நினைக்கிறன்.

bhuvi

ஏனெனில் அவர் எளிதாக பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடிக்கக்கூடிய வீரர் மேலும் மும்பை போன்ற மைதானங்கள் அவர் எப்படி ஆடுவார்கள் என்று நமக்கே தெரியும். அதனால் அவருக்கு யார்க்கர் மற்றும் பௌன்சர்களை வீச விரும்பினேன். பவுலிங்கை கொஞ்சம் மாற்றினால் போதும் அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்தி விடுவார் எனவே அவருக்கு எதிராக டைட்டாக பந்து வீசினேன். கடைசியில் அவரை வீழ்த்தினேன். இல்லையெனில் அவர் ஆட்டத்தை மாற்றியிருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -