இந்திய ஏ அணியில் விளையாடப்போகும் நச்சத்திர வேகப்பந்து வீச்சாளர்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.?

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு நிறைய போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இங்கிலாந்து தொடரின் ஒரு நாள் போட்டியில் மீண்டும் புவனேஷ்வர் குமாருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரில் அவர் பெயர் இருந்தாலும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

Bhuvanesh Kumar

இந்நிலையில், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்தும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டார். தற்போது இங்கிலாந்தில் இருந்து இந்திய திரும்பிய இவர் பெங்களூரு நேஷனல் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும், காயம் குணமடைய அவருக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் இப்பொது காயத்திலுந்து முழுமையாக மீண்டுள்ளார் என தெரிய வருகிறது.

BCCI யின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் புவனேஷ்வர் குமார் முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும், இந்தியா ஏ மற்றும் தென்னாபிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாட இருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசினால் அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது. என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காயமடையாமல் இருக்க அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். ஏனென்றால் அடுத்த மாதம் ஆசியகோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது. அதில் விளையாட கண்டிப்பாக அனுபவம் புவனேஷ்வர் குமார் அவசியம் என்பதால் அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்.