- Advertisement -
இந்திய கிரிக்கெட்

புவனேஷ்வர் குமாரின் தந்தை திடீர் மரணம். அவருக்கு இப்படி ஒரு கொடிய நோயா ? – சக வீரர்கள் ஆறுதல்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். ஆனாலும் அடிக்கடி ஏற்படும் காயம் காரணமாக இவர் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர் தொடரின் பாதியில் காயம் காரணமாக வெளியேறினார்.

அதன் பின்னர் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பிய அவர் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தற்போது தனது குடும்பத்தாருடன் நேரத்தை கழித்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தையான கிரண் பால் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

63 வயதாகும் அவர் தந்தை கிரண் பால் உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில வருடங்களாக கொடிய புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு குணமடைந்த அவர் வீட்டிற்கு வந்ததும் நீண்ட நாள் கழித்து கடந்த சில வாரங்களாக அவருக்கு உடல்நிலை மோசமாக மாறியது.

அதனை தொடர்ந்து தற்போது அருகாமையில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு இருந்த கேன்சர் காரணமாகவே அவர் தற்போது உயிரிழந்துள்ளது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தனது குடும்பத்தாருடன் இருக்கும் புவனேஷ்வர் குமார் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

அவருக்கு பயோ பபுளில் இருக்கும் இந்திய அணியை சேர்ந்த சக வீரர்கள் பலரும் மும்பையில் இருந்து தொலைபேசியின் மூலம் ஆறுதல் கூறி வருவது குறிப்பிடத்தக்கது..

- Advertisement -
Published by