நேற்றைய போட்டியில் புவனேஷ்வர் குமார் படைத்த மோசமான சாதனை – இதை கவனிச்சீங்களா ?

Bhuvi-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியின் போது இந்திய அணி இலங்கை அணி நிர்ணயித்த 263 ரன்களை 36.4 ஓவர்களில் கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

IND

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கொழும்பு மைதானத்தில் விளையாடியது. இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக அசலங்கா 65 ரன்களையும், பெர்னாண்டோ 50 ரன்களையும், கருணரத்னே 44 ரன்களை குவித்தனர்.

இந்திய அணி சார்பாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். பின்னர் விளையாடிய இந்திய அணி இறுதி ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ஒரு மோசமான சாதனையை படைத்தார்.

Bhuvi

அந்த சாதனை யாதெனில் கடந்த 2015ஆம் ஆண்டு நோபால் வீசிய புவனேஷ்வர் குமார் அதனைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 3903 பந்துகள் நோபால் வீசாமல் இருந்தார். அதன் பிறகு இந்த இரண்டாவது போட்டியின் போது இலங்கை அணிக்கு எதிராக நோபால் ஒன்றினை வீசி புவனேஸ்வர் குமார் ஆறு ஆண்டுகள் கழித்து அந்த சாதனையை தானே முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாம் பவுலர்கள் நோபால் வீசி பார்த்திருக்கும் வேளையில் 6 ஆண்டுகளாக நோபால் வீசாத ஒரு வீரர் தற்போது நோபால் வீசியுள்ளதை ஆச்சரியமாக பார்க்கும் செய்தியாக இந்த விடயம் மாறியுள்ளது.

Advertisement