மீண்டும் அணிக்கு திரும்பிய ரிவர்ஸ் ஸ்விங் புயல். கலீல் அகமத் இடம் காலி – விவரம் இதோ

Khaleel
- Advertisement -

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு இன்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இதர சில உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் மூலம் இந்த தொடருக்கான தேர்வு நேற்று நடந்தது.

இந்தத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஒருநாள் அணிக்கான வீரர்களின் விவரம் மற்றும் டி20 தொடருக்கான வீரர்களின் விவரம் வெளியாகியது. அதன்படி கேப்டனாக மீண்டும் விராட்கோலி தொடர்கிறார். ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தொடர்கிறார்.

Bhuvi

அதன்படி காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த புவனேஸ்வர் குமார் தற்போது முழு உடல் தகுதி பெற்று உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு தொடர்களிலும் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கடந்த சில தொடர்களாக பந்து வீசி வந்த கலீல் அஹமது தொடர்ச்சியான மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement