IND vs WI : மீண்டும் ரெடி ஆகி பயிற்சிக்கு திரும்பிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் – வீடியோ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Bhuvi-1
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

Bhuvi

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய புவனேஸ்வர் குமார் நேற்று மீண்டும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.

நேற்று முழுவதும் பயிற்சியில் பெற்ற புவனேஸ்வர்குமார் சிறப்பாக பந்துவீசினார் அதனை வீடியோவாக பதிவு செய்து பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதோ புவனேஸ்வர் குமார் பவுலிங் செய்யும் அந்த வீடியோ :

நேற்று பயிற்சியில் புவனேஷ்வர் குமார் கலந்து கொண்டதால் நாளைய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ் குமார் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புவனேஸ்வர் குமார் விளையாடினால் அது இந்திய அணிக்கு பலமே மேலும் நாளை இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாடுமா அல்லது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுமா என்பதை நாளைய போட்டியில் தான் பார்த்தால்தான் தெரியும்.

Advertisement