கொரோனா அறிகுறி தெரிய ஆரம்பித்ததால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்ட – நட்சத்திர இந்திய வீரர்

IND

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதலே பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதையும் நாம் கண் முன்னே பார்த்து வருகிறோம். சீனாவில் துவங்கிய இந்த கொரோனா வைரஸ் ஆனது கடல்கடந்து பல நாடுகளிலும் தனது கோர தாண்டவத்தின் நிகழ்த்தியது. அதன்படி இந்தியாவையும் விட்டு வைக்காத இந்த வைரசுக்கு இந்தியா முழுவதும் தற்போது கூட நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Corona-1

சாதாரண மக்கள் இன்றி அரசியல்வாதிகள், பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது. மேலும் சில கிரிக்கெட் வீரர்களின் பெற்றோர்களும் கொரானா வைரஸ் காரணமாக இறந்ததை நாம் சமீபத்தில் கேள்விப்பட்டிருப்போம்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் வீரர்களுக்கு இடையே கொரோனா பரவியதால் ஐபிஎல் தொடரும் இந்த ஆண்டு இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய ஆரம்பித்துள்ளது என்பதால் அவர் தன் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

bhuvi

மேலும் அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவிக்கும் கொரோனா அறிகுறி தெரிய ஆரம்பித்தால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டனர். 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக அணியில் அவ்வபோது இடம்பெறாமல் இருந்தாலும் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்கு திகழ்கிறார்.

- Advertisement -

bhuvi dad

தற்போது துவங்க உள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத புவனேஸ்வர் குமார் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் நிச்சயம் இந்திய அணியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. புவனேஸ்வர் குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்வா ? நெகட்டிவ்வா ? என்ற உறுதியான தகவலை இன்னும் அவர்கள் தெரியப்படுத்தவில்லை. கடந்த சில வாரத்திற்கு முன்னர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கொரோனாவுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement