ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சவால் விட்ட புவனேஷ்வர் குமார் ?

kumar
- Advertisement -

‘ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணிலும் நமது பந்துவீச்சாளர்களால் சாதிக்க முடியும்’ என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
dcCover

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை இந்திய அணி வெற்றிகரமாக முடித்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தாலும், ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கிலும், டி20 தொடரில் 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. பொதுவாக, வெளிநாட்டு மண்ணில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டதில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது. ஆனால், இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிகொடுத்தார்கள் என்றே கூறலாம்.

பல போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டாலேயே இந்திய அணி வென்றது. டி20 தொடரில் தொடர் நாயகனாக ஜொலித்த புவனேஷ்வர் குமாரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுகுறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன்,`இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் கடைசி ஓவர்களில் எங்கள் பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர். அவர்கள் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள்’ எனப் புகழ்ந்திருந்தார்.

- Advertisement -

SriLanka

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கத் தொடர்குறித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ”நாங்கள் பேராசை பிடித்தவர்கள் இல்லை. எங்களுக்கு இந்த 2 கோப்பைகள் போதும். அடுத்த முறை இங்கு (தென்னாப்பிரிக்கா) வரும்போது, 3 கோப்பைகளையும் வெல்ல முயற்சிப்போம். இந்தச் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக, டெஸ்ட் தொடர். 1-2 என்ற கணக்கில் அதை நாங்கள் இழந்திருந்தாலும், அந்த 2 போட்டிகளுமே நாம் வெற்றிபெற்றிருக்க வேண்டியவைதான். தொடரை 3-0 என்ற கணக்கில் அல்லது 2-1 என்ற கணக்கிலோ நாம் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், அது எங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணிலும் சாதிக்க நாங்கள் தயாராகிவிட்டோம்’’ என்றார்.

Advertisement