- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 வருசத்துல ஒருமுறை தடுமாறியதால் பழைச மறந்து கிண்டலடிச்சாங்க – சீனியர் இந்திய பவுலர் ஆதங்கம்

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் உதவியுடன் தோற்கடித்து 2வது போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி நடை போட்டு வருகிறது. அதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ள இந்தியா அடுத்ததாக அக்டோபர் 30ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

முன்னதாக இத்தொடரின் கடைசி நேரத்தில் ஜஸ்பிரிட் பும்ரா காயமடைந்து விலகியதால் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு துறை முகமது சமி, புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் ஆகியோரது கட்டுக்கோப்பான செயல்பாட்டால் வெற்றிகளில் பங்காற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக பும்ரா இல்லாத நிலையில் வேகப்பந்து வீச்சு கூட்டணியை முன்னின்று நடத்த வேண்டிய சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து இதர பவுலர்களை காட்டிலும் 5.50 என்ற குறைவான எக்கனாமியில் அசத்தலாக செயல்பட்டார்.

- Advertisement -

ஆதங்கப்படும் புவி:
அதைவிட நெதர்லாந்துக்கு எதிராக வீசிய முதல் 2 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசிய அவர் மொத்தமாக 3 ஓவரில் 9 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மீண்டும் இதர பவுலர்களை காட்டிலும் 3.00 என்ற மிகவும் குறைவான எக்கனாமியில் அசத்தலாக பந்து வீசினார். கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான இவர் அடுத்த சில வருடங்களிலேயே 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பந்து வீச்சாளராக உருவெடுத்தார். குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பதில் கில்லாடியாக திகழும் இவர் 2018க்குப்பின் சந்தித்த காயத்தால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை இழந்து டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் குறிப்பாக 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கிய அவர் வெற்றிகளையும் தாரை வார்த்ததால் நிறைய கிண்டல்களுக்கு உள்ளானார். அப்போது அத்தனை வருடங்களாக இந்தியாவுக்கு ஆற்றிய பங்கை மறந்து விமர்சிக்கப்பட்டதை நினைத்து ஆதங்கப்பட்டதாக தெரிவிக்கும் புவனேஸ்வர் குமார் அதற்காக கவலைப்படாமல் இந்த உலகக் கோப்பையில் அசத்துவதற்காக சமூக வலைதளங்களிலிருந்து மொத்தமாக விலகியியுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இத்தனை வருடங்களில் நான் ஒரு தொடரில் சுமாராக செயல்பட்டேன். இருந்தாலும் அது நடந்து முடிந்தது. ஊடகம் மற்றும் வர்ணனையாளர்கள் எங்களுடைய டெத் பவுலிங் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஒரு அணியாக நாங்கள் எப்போதும் மேடு பள்ளங்களை கடந்து எங்களை கூர்மைப்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம். டி20 கிரிக்கெட் என்பது பவுலர்களுக்கு மிகவும் கடினமானது. அதே போல் பிட்ச் எங்களுக்கு சாதகமாக அமைந்தால் பேட்ஸ்மேன்களும் திணறுவார்கள். ஆனால் ஆசியக் கோப்பை பெரிய தொடர் என்பதால் அனைவரும் உங்களை விமர்சிக்கத்தான் செய்வார்கள்”

“எனவே உலகக் கோப்பையில் சமூக வலைதளங்களிலிருந்து நான் முழுமையாக விலகியுள்ளதால் அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் சமூக வலைதளங்களில் இருந்து தான் இது போன்ற விமர்சனங்கள் உங்களை தாக்கும். மேலும் என்னுடைய பந்து எப்போதும் ஸ்விங் ஆகும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. இங்கே நானும் அர்ஷிதீப் சிங்கும் இணைந்து செயல்படுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் அறிமுகமானது முதல் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்”

- Advertisement -

“இளம் வீரராக இருக்கும் அவர் என்னிடமும் ரோகித், விராட் ஆகியோரிடமும் இந்த உலகக் கோப்பைக்காக நிறைய ஆலோசனைகளை கேட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அத்துடன் டெத் ஓவர்களில் பந்து வீச நாங்கள் இதுவரை யாரையும் தீர்மானிக்கவில்லை. போட்டி நாளன்று நிலைமை எப்படியோ அதற்கேற்றார் போல் செயல்படுகிறோம்.

இதையும் படிங்க : வீடியோ : அவருக்கு மட்டும் சான்ஸ் கொடுங்க பின்னிடுவாறு – சூர்யகுமாரை வைத்துக்கொண்டே ரவி சாஸ்திரி நேரடி கோரிக்கை

இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அதற்காக அவர் அணியில் இருந்தால் நாங்கள் எக்ஸ்ட்ராவாக சாதிப்போம் என்று கிடையாது. அவர் இருந்தாலும் இதே செயல்பாடுகளை நாங்கள் வெளிப்படுத்துவோம்” என்று கூறினார்.

- Advertisement -
Published by