இந்திய அணியில் உள்ள பல பேர் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கின்றர். அந்த வகையில் இந்திய வீரரான புவனேஸ்வர் குமாரும் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புவனேஸ்வர் குமார் திருமணத்திற்கு முன்னர் தனது காதலில் நடந்த சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வேக பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் ஐபிஎல் போட்டிகளில் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு அர்புதமான பந்துவீச்சாளர். தனது ஆரம்பகால சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், அதன் பின்னர் வந்த தொடர்களில் சிறப்பாக பந்துவீசி தனக்கென்று ஒரு பெயரை இந்திய அணியில் பதித்தார்.
தற்போது 28 வயதாகும் இந்த இளம் வீரர், கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான நூபர் நகர் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வரவேற்பு டெல்லியில் உள்ள தாஜ் மஹால் விடுதியில் விமர்சியாக நடைபெற்றது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சாகீர் காணும் இதே தேதியில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற புவனேஸ்வர் குமார், தனது திருமணம் மற்றும் காதல் வாழ்கை குறித்தும் பேசியுள்ளார். அவரது காதலை பற்றி மனம் திறக்கையில் ‘என்னுடைய சிறுவயது முதலே அவரை(அவருடைய மனைவி) தெரியும். நாங்கள் இருவரும் 12 ஆண்டுகளாக ஒரே காலனியில் தான் வசித்து வந்தோம்.
நாங்கள் இருவரும் காதலித்த விடயம் அவர்களுது வீட்டிற்கு தெரிந்த போது முதலில் அவர்கள் சற்று யோசித்தார்கள். சொல்லபோனால் 3 ஆண்டுகளுக்கு மேல் அவர்களுக்கு நாங்கள் காதலிப்பதே தெரியாது. நல்லவேளை எப்படியோ யாரோ சிலரால் எங்களது காதல் விவகாரம் எங்களின் குடுமபத்திற்கு தெரிய வந்தது, இல்லையென்றால் என்னுடைய காதலை அவர்களது வீட்டில் தெரிவிக்க தைரியம் இல்லாமல் தான் இருந்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.