நீங்க நம்பித்தான் ஆகணும்.! பேட்டிங்கில் கோலியை மிஞ்சிய புவனேஷ்குமார்.!

Kohli

டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரியான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மட்டும் முக்கியமான ஒரு தொடர் அல்ல கோலிக்கும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய ஒரு முக்கியான தொடராக இருக்கிறது.

bhuvneshwar

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலியின் ரன் குவிக்கும் வேகம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், இங்கிலாந்து மண்ணில் அவரது ரன் எடுக்கும் வேகம் இந்திய பந்துவீச்சாளர்களை விட கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது என்பது தான் நம்ப முடியாத உண்மை. கடந்த 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் விராட் கோலி 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 247 ரன்களை குவித்திருந்தார், 3 அரை சதங்களும் அடங்கும்.

Bhuvanesh Kumar

அதே போல இந்த தொடரில் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கூட விராட் கோலியை விட அதிகபட்சமாக ரன்களை எடுத்திருந்தார். அவர் இந்த தொடரில் 153 ரங்களை எடுத்திருந்தார். ஆனால், விராட் கோலி ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான சாராசரியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.