தோனி ரன்அவுட் ஆகும் வரை நாங்கள் இதையே நினைத்து கொண்டிருந்தோம் – பந்துவீச்சு பயிற்சியாளர்

Bharath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது உலக கோப்பை தொடரில் விளையாடி முடித்து இந்தியா திரும்பி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் இந்து நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Kohli

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : அரையிறுதிக்கு முன்பு வரை இந்திய அணி மிக வலிமையாக இருந்ததாகவே நான் கருதுகிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின்போது போட்டி மழை காரணமாக மறுநாள் தள்ளிப் போனதால் அந்த போட்டியில் இந்திய அணிக்கு சிக்கலானது.

ஏனென்றால் மறுநாள் பிட்சின் தன்மை மாறி விட்டது. அதனால் இந்திய அணி தோல்வியையும் பெற்றது. மேலும், தோனி குறித்து அவர் பேசியபோது : தோனியை விமர்சிப்பதில் நியாயம் இல்லை. இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் அளித்த பங்கு அபரிவிதமானது. அவர் ஒரு ஜாம்பவான் பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக இந்திய அணியும் வழி நடத்தியுள்ளார்.

Dhoni

அரையிறுதிப் போட்டியில் தோனி களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையே எங்களிடம் இருந்தது. ஏனெனில் இறுதிக் கட்டங்களில் அவர் பெரிய ஷாட்டை அடிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்ததை நாம் பார்க்க முடிந்தது. மேலும் அதிர்ஷ்டம் இன்றி திடீரென்று தோனி ரன் அவுட் ஆனதால் நாம் அந்த போட்டியை இழந்தோம் என்று பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement