ஹர்டிக் பாண்டியாவிற்கு பதிலாக நாங்கள் இவரை ஆல்ரவுண்டராக மாத்தபோறோம் – பரத் அருண் ஓபன்டாக்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் 20 முன்னனி வீரர்கள் மற்றும் 4 பேக்கப் வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த அணியில் இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் இந்திய தேர்வுக் குழுவை விமர்ச்சித்து வந்த சூழ்நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் பரத் அருண் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்பேட்டில் அவர், ஷர்துல் தாக்கூரின் ஆல்ரவுண்டர் திறமையை பாரட்டி பேசியதோடு மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவின் சமீபத்திய ஃபார்மைக் குறித்து அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார். இணையத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,

pandya

நாங்கள் அனைவரும், இந்திய அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் வீரரை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளோம். எங்களால் அவர்களை உள்ளூர் கிரிக்கெட்டில் தேட முடியாது. ஏனெனில் நாங்கள் அனைவருமே இந்திய தேச அணிக்காக தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறோம். அதன்படி பார்த்தால், எங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வீரராக ஷர்துல் தாக்கூர்தான், சிறந்த தேர்வாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கிறோம். கடந்த சில தொடர்களாகவே அவர் தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்து வருகிறார். ஆஸ்திரேலியா தொடரின்போது அதை நீங்களே உணர்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனவே நாங்கள்அவரை ஒரு பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் மாற்ற இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

- Advertisement -

இந்த பேட்டியில் இந்தியாவின் மற்றொரு ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியாவை பற்றியும் குறிப்பிட்டு பேசிய அவர், ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் தொடரந்து காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். காயத்திலிருந்து அவர் மீண்டு வந்தாலும்,அவரால் பழைய மாதிரி பந்து வீச இயலவில்லை. ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு வந்து தனது திறமையை நிரூபிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்து வீசினார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

Thakur

ஆனால் அதற்குப் பின் அவரால் பந்து வீச முடியவில்லை. எனவே நாங்கள் ஷர்துல் தாக்கூரின் பேட்டிங் திறமையை மேம்படுத்த உள்ளோம் என்று அவர் கூறினார். இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்து இந்திய அணிக்கு நல்ல திறமையான பேட்ஸ்மேன்கள் கிடைத்து வருகின்றனர். ஆனால் கபில் தேவிற்குப் பிறகு இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் இதுவரை கிடைக்கவில்லை. இந்திய அணிக்காக அறிமுகமான புதிதில் ஹர்திக் பாண்டியா அந்த இடத்தை நிரப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

pandya

ஆனால் தற்போது அவரால் முன்பு போல பந்து வீச இயலவில்லை என்பதே முற்றிலுமான உண்மை. ஒரு ஆல்ரவுண்டர் நிச்சயமாக போட்டியின்போது பந்து வீசியே ஆக வேண்டும். எனவே ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கும் பேட்டிங் திறமையை மட்டும் கருத்தில் கொண்டு அவரை அணியில் எடுக்க இந்திய தேர்வுக் குழு விரும்பாது. மேலும் இந்திய அணிக்கு சிக்ஸர்கள் அடிக்க பேட்ஸ்மேன்கள் கிடைத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் கிடைப்பாரா என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது.

Advertisement