பும்ராவின் இந்த செயல்பாடுதான் அவரை தொடர்ந்து சிறப்பாக பந்துவீச வைக்கிறது – பரத் அருண் பாராட்டு

Bharat-Arun
- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் தற்போது பும்ராவின் பந்து வீச்சு குறித்து பாராட்டி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தற்போது சிறப்பாக பந்து வீசுகிறார்.

Bumrah

- Advertisement -

அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் அவர் சூழ்நிலையை புரிந்துகொண்டு தனது லென்த்தை மாற்றி பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் செல்லும்முன் நான் அவருடைய லென்த்தை கரெக்டாக பின்பற்றி வருகிறீர்கள் அதை மாற்றாமல் வீசுங்கள் என்று கூறினேன்.

அதைப் போன்று அவரும் லென்த்தை மாற்றாமல் சிறப்பாக பந்துவீசி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா ஒரு திறமையான பந்துவீச்சாளர் அவர் அவருடைய பந்துவீச்சை சூழ்நிலைகளுக்கேற்பவும், மைதானத்தின் தன்மைக்கு ஏற்பவும் மாற்றிக்கொள்கிறார். அந்த கணிப்பை அவர் சரியாக செய்து வருகிறார். அவருடைய இந்த மாற்றமானது அவருக்கு தொடர்ந்து விக்கெட்களை பெற்று தருகிறது. வேற எந்த மாற்றமும் அவர் பந்துவீச்சில் மாற்றம் செய்ய தேவையில்லை.

bumrah

மேலும் 140 கிலோ மீட்டருக்கு மேல் அவரால் தொடர்ந்து பந்துவீச முடிகிறது. எனவே அவருடைய வேகம் மற்றும் துல்லியம் அவருக்கு தொடர்ந்து விக்கெட்டுகளை தருகிறது என்று நான் கருதுகிறேன். மேலும் ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் ஒரு வித்தியாசம் இருக்கும் அதேபோன்று பும்ராவின் ஸ்டைலே ஒரு வித்தியாசம்தான் என்றும் அவர் விரைவில் 50 விக்கெட்டுகளை எடுத்ததற்கு வாழ்த்துக்கள். மேலும் கிரிக்கெட்டில் அவர் நிறைய சாதிப்பார் என்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பரதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement