பும்ராவிற்கு அறுவைசிகிச்சை எல்லாம் வேணாம். ஆனால் சரியாக இத்தனை மாதங்கள் வரை ஆகும் – பரத் அருண் பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் காயம் காரணமாக விலகி இருந்தார். அவர் கடந்த தென்னாபிரிக்க தொடரின் போது காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அந்த தொடரில் பங்கேற்று விளையாடினார்.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடர் தொடங்கும் முன்னரே பும்ரா குறித்து பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிக்கையில் : பும்ராவிற்கு முதுகில் சிறிய அளவு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் காயம் குணமடையும் வரை பிசிசிஐ மருத்துவக்குழு அவரது காயத்தை கண்காணிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த பும்ரா மேல்சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார்.

அங்கு அவருடைய காயத்தின் தன்மை குறித்து ஆலோசித்த சிறப்பு மருத்துவர்கள் அதன்படி அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் அவருக்கு முறையான பயிற்சி மற்றும் ஓய்வு தான் தேவை என்று தெரிவித்துள்ளனர். அதனால் தற்போது மீண்டும் பும்ரா இந்தியா திரும்ப உள்ளார். இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில் :

Bumrah

பும்ராவிற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றாலும் இன்னும் மூன்று மாதங்கள் வரை அவர் ஓய்வில் இருக்கவேண்டும். அடுத்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் என்று நம்புகிறோம் என்று பரத் அருண் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement