- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த வாய்ப்பை யூஸ் பண்ணி முகமது சிராஜ் பெருசா சாதிக்கனும்.. அதுதான் என் விருப்பம் – பரத் அருண் பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று ஏற்கனவே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டது.

இம்முறை முகமது சிராஜ் சாதிக்க வேண்டும் : பரத் அருண்

இதன் காரணமாக இந்த தொடரின் மூன்று போட்டியில் விளையாடும் அவர் 2 போட்டிகளில் ஓய்வு எடுப்பார் என்றும் தெரிகிறது. இதன் காரணமாக மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்திய அணியை பந்துவீச்சில் வழிநடத்துவார் என்று தெரிகிறது. அதேவேளையில் இந்திய அணியிடம் பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாகூர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் பும்ராவின் இழப்பினை அவர்களால் ஈடுசெய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

பும்ரா இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பதனால் தற்போது இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கும் முகமது சிராஜ் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக மாறும் எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த இங்கிலாந்து தொடர் முகமது சிராஜ்-க்கு கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுகிறேன். ஏனெனில் நல்ல அனுபவத்தை வைத்திருக்கும் அவர் ஏற்கனவே மிகச்சிறப்பான ஸ்பெல்களை அவரது கரியரில் வீசியுள்ளார். அதனை நான் நேரிலும் பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது கடந்த முறை அவர் பந்துவீசுகையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அது முகமது சிராஜின் சிறந்த பந்துவீச்சு என்று கூறுகிறேன். இம்முறை அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அவரிடம் அதற்கான திறமை இருக்கிறது.

இதையும் படிங்க : ரோஹித், கோலியை இந்தியா மிஸ் பண்ணும்.. அஸ்வின் பாய் இல்லாத எனக்கு அவர் தான் கம்பனி.. குல்தீப் பேட்டி

உண்மையிலேயே அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்று கருதுகிறேன். ஏனெனில் தற்போது மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் தொடரிலும் அசத்தலாக செயல்பட்டிருந்தார். எனவே அதனை பயன்படுத்தி இந்த இங்கிலாந்து தொடரில் அவர் அசத்த வேண்டும் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -