பாண்டியாவை தொடர்ந்து சிறந்த ஆல்ரவுண்டராக மாற இவருக்கு அனைத்து திறமையும் உள்ளது – பரத் அருண் பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாளை மோத இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை பிற்பகல் 1 30 மணிக்கு துவங்குகிறது.

Pollard

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சர்வதேச அளவில் இந்திய அணியின் திறன் தற்போது பலமடங்கு கூடியுள்ளது. இந்திய அணி வீரர்களின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் சிறப்பாக உள்ளதால் இந்திய அணி தற்போது உயர் நிலையில் உள்ளது.

- Advertisement -

மேலும் இளம் வீரரான ஷிவம் டுபே தற்போது சிறந்த ஆல்-ரவுண்டராக மாறி வருகிறார். சர்வதேச அளவிலான அவரின் செயல்பாடு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் மீது எனக்கு நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கோலியும் அவர் மீது நம்பிக்கை வைத்து கூடுதலாக அவரை பந்துவீச வைக்கிறார். நிச்சயம் அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக வருவதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளதாக நான் நினைக்கிறேன்.

dube

சர்வதேச போட்டிகளில் இடம்பெற்று சிறப்பாக விளையாடும் போது ஷிவம் துபே போன்ற இளம்வீரர்களுக்கு தங்கள் மீது உள்ள நம்பிக்கை அவர்களுக்கே உயரும் என்றும் பரத் அருண் கூறினார். ஹர்டிக் பாண்டியா காயம் அடைந்த காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்த ஷீவம் துபே வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசினார்.

Dube-1

அதனைத் தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட துபே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் கோலிக்கு பதிலாக 3 ஆவது இடத்தில் இறங்கி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement