35 வயதிற்கு மேற்பட்டவர்களை கொண்ட சிறந்த பெஸ்ட் லெவன் அணி – முழு லிஸ்ட் இதோ

Dhoni-1
- Advertisement -

2000ஆம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர்கள் பலரும் தற்போது 35 வயதைக் கடந்து விட்டனர். கிட்ட தட்ட ஒவ்வொருவரும் வரிசையாக ஓய்வுபெற்று விட வேண்டியதுதான். அப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர். அப்படியிருந்தும் தற்போது வரை மிகச் சிறப்பாக ஆடிவரும் வீரர்களை வைத்து 35 வயதுக்கும் அதிகமாக உள்ள மிகச்சிறந்த ஒருநாள் அணியை தற்போது பார்ப்போம்.

Gayle 1

- Advertisement -

கிறிஸ் கெயில் :

இவருக்கு தற்போது 40 வயதாகிறது கடந்த வருடம் கூட 17 ஒருநாள் போட்டிகளில் ஆடி 753 ரன்களை அடித்துள்ளார். இரண்டு சதங்களை விளாசியுள்ளார். டி20 போட்டிகளில் ருத்ரதாண்டவம் ஆடுவதில் வல்லவர்

முகமது ஹபீஸ் :

- Advertisement -

இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 39 வயதாகிறது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 10 போட்டிகளில் ஆடி 417 ரன்கள் குவித்தார். 2003 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

பாப் டு பிளசிஸ் :

- Advertisement -

இவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். 35 வயதாகிறது சென்ற வருடம் ஐபிஎல் தொடர் கூட அடித்து நொறுக்கினார் சமீபகாலமாக இவரது ஆட்டம் அற்புதமாக இருக்கிறது.

ராஸ் டைலர் :

- Advertisement -

இவர் நியூசிலாந்து அணியை சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். தற்போது 36 வயதாகிறது .நியூசிலாந்து அணிக்காக முதன்முதலில் மூன்று விதமான போட்டிகளிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் இவர்தான் .

taylor 1

சோயப் மாலிக் :

இவர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2001 ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். இவருக்கு தற்போது 38 வயதாகிறது. சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அதிரடியாக விளையாடினார். மொத்தம் 239 ரன்கள் குவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி

இவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 38 வயதாகிறது. 2019-ம் ஆண்டு மட்டும் இவர் 500+ ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை தொடரிலும் இரண்டு அரை சதங்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முகமது நபி :

இவருக்கு 35 வயதாகிறது. இவர் ஆப்கானிஸ்தான்த்தை சேர்ந்தவர். உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர்.

மாஷ்ரஃப் மோர்டேசா :

வங்கதேசத்தைச் சேர்ந்தவர். சீக்கிரம் ஓய்வு பெற்றுவிடுவார். இவருக்கு தற்போது 36 வயதாகிறது.

harbhajansingh

ஹர்பஜன்சிங் :

நேற்றுதான் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் மொத்தம் 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

அமித் மிஸ்ரா :

இந்தியாவின் மறைக்கப்பட்ட ஒரு வீரர் இவர். இவருக்கு தற்போது 36 வயதாகிறது. இந்திய அணிக்காக 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் சராசரி வெறும் 23 தான். கடைசியாக 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேல் ஸ்டெயின் :

கடந்த ஐந்து வருடங்களாக இவரது கிரிக்கெட் வாழ்க்கை பாலாய் போனதற்கு இவரது காயங்கள் தான் காரணம். 2019ஆம் ஆண்டு கடைசியாக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தற்போது டி20 போட்டியிலும் ஒருநாள் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வருகிறார்.

Advertisement