சொந்த ஊர் என்றும் கூட பார்க்காமல் ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொண்ட ஸ்ரீநாத்! பெங்களூரு பிட்ச் மீது அதிரடி நடவடிக்கை

Javagal Sreenath Bengaluru Stadium
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்று 2 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றிகளுடன் கோப்பையை வென்று அசத்தியது. அதற்கு முன் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இலங்கையை பந்தாடிய இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.

IND

- Advertisement -

மொத்தத்தில் இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் கில்லி என மீண்டும் நிரூபித்தது. மறுபுறம் இந்தியா போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு வெற்றிகளைக் கூட பதிவு செய்ய முடியாத இலங்கை ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

சர்ச்சையான பெங்களூரு பிட்ச்:
முன்னதாக இலங்கையின் இந்த சுற்றுப்பயணத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. அதில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 175* ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்து இலங்கையை தனி ஒருவனாக பந்தாடி இந்தியாவிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

Ravindra Jadeja

அதன்பின் பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக செயல்பட்ட இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டியில் 3-வது நாளுக்கு பின்பு தான் பிட்ச் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக உருமாறி பந்து சுழல ஆரம்பிக்கும்.

- Advertisement -

தாறுமாறாக சுழன்ற பெங்களூரு பிட்ச்:
ஆனால் அந்த 2-வது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு மைதானத்தின் பிட்ச் முதல் நாளன்றே தாறுமாறாக சுழன்று சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அதுபோல் முதல் நாளே சுழல ஆரம்பித்தால் கண்டிப்பாக அந்தப் போட்டி சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் பேட்ஸ்மேன்களுக்கு பாதகமாகவும் அமையும். அதன் காரணமாக போட்டி முழுமையான 5-வது நாள் வரை செல்லாது.

pant

அந்த வகையில் எதிர்பார்த்தது போலவே பேட்ஸ்மேன்கள் தடுமாறிய வேளையில் 3 நாட்களுக்குள் அப்போட்டி நிறைவடைந்தது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த இந்திய வீரர்கள் கூட தடுமாறிய வேளையில் ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்ததால் தப்பிய இந்தியா அதன்பின் அபாரமாக பந்து வீசி வெற்றி பெற்றது.

- Advertisement -

ஸ்ட்ரிக்ட் ஸ்ரீநாத்:
பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்த பின் அந்த போட்டி சுமூகமாக நடைபெற்றதா? அந்த போட்டிக்கு பயன்படுத்தப்படும் பிட்ச் தரமானதாக இருந்ததா? என்பது போன்ற அம்சங்களை ஆராயும் போட்டி நடுவர் அதன் முடிவுகளை ஐசிசிக்கு அனுப்பி வைப்பார்.

bengaluru

மேலும் ஒரு போட்டி முடிந்த பின் அந்த பிட்ச் “மிகவும் சிறப்பானது, சிறப்பானது, சுமார், சுமாருக்கும் கீழ், விளையாட தகுதி இல்லாதது” ஆகிய 5 பிரிவுகளின் கீழ் ஏதேனும் ஒன்றை வைத்து மதிப்பிடப்படும். அதை போட்டி முடிந்த பின் அந்தப் போட்டி நடுவர் ஐசிசிக்கு அனுப்பி வைப்பார். அதை வைத்துதான் எதிர்காலத்தில் அந்த மைதானத்தில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி அனுமதி வழங்கும்.

- Advertisement -

அதன்படி முதல் நாளன்றே தாறுமாறாக சுழன்று சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூர் பிட்ச்சுக்கு “பிலோ ஆவரேஜ் அதாவது சுமாருக்கும் கீழ்” என்ற தரச்சான்றிதழை அளித்து அதற்கு தண்டனையாக ஒரு கருப்பு புள்ளியை ஐசிசி வழங்கியுள்ளது. ஒரு மைதானம் 5 வருடத்திற்குள் இதுபோல 5 கருப்பு புள்ளிகளைப் பெறும் பட்சத்தில் அதற்கு தண்டனையாக அடுத்த 12 மாதங்களில் அந்த மைதானத்தில் எந்தவித சர்வதேசப் போட்டி நடத்த முடியாது என்ற ஐசிசி விதி உள்ளது.

இதையும் படிங்க : கங்குலி கொடுக்கும் அழுத்தத்தால் விராட் கோலி எடுத்துள்ள அதிரடி முடிவு – இவருக்கா இந்த நிலைமை

அப்படிப்பட்ட நிலையில் அந்த மதிப்பெண்ணை வழங்கிய அந்த போட்டிக்கு நடுவராக இருந்தவர் பெங்களூருவை சேர்ந்த இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். என்னதான் தனது சொந்த ஊராக இருந்தாலும் தனது கடமை தவறாமல் கண்ணியமாக செயல்பட்ட அவர் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

Advertisement